Tuesday, 4 November 2014

மோடி-ஒபாமா சந்திக்க வாய்ப்பு

மோடி-ஒபாமா சந்திக்க வாய்ப்பு

 இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா இருவரும் மீண்டும்  சந்திக்க இருப்பதாக  தெரியவருகிறது. அடுத்த வாரம் கிழக்கு ஆசிய நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக  அமெரிக்க அதிபர் ஒபாமா செல்கிறார் . சீனா, மியான்மர் , ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இதனிடையே  வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபக்பொருளாதார மாநாடு நடைபெற உள்ளது, இதனையடுத்து மியான்மர் நாட்டில் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் அமெரிக்க ஆசியன் உச்சி மாநாட்டிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார் ஒபாமா . 


  அடுத்தாண்டு மியான்மரில் நடைபெற உள்ள பொது தேர்தலில் முக்கிய எதிர்கட்சி தலைவரான ஆங்சாங்சூயி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கபடுகிறது. இதனையடுத்து ஆங்சாங்சூயி ஒபாமா சந்திப்பு நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கு பெற உள்ளார்.இதனிடையே இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கருதபடுகிறது.   முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற சென்றார் மேலும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியதை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. .

Sunday, 2 November 2014

குக்கிராமத்தை  தத்து எடுத்த சச்சின். சென்னை வருகிறார்

குக்கிராமத்தை தத்து எடுத்த சச்சின். சென்னை வருகிறார்

சென்னை வருகிறார் சச்சின் டெண்டுல்கர்.ஆந்திர மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தை, முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தத்து எடுத்து, வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், சில நாட்களுக்கு முன்பு  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிரதமரின், 'துாய்மை இந்தியா' திட்ட வளர்ச்சி நோக்கத்தின் அடிப்படையில், குக்கிராமம் ஒன்றை தத்து எடுத்து, அக்கிராமத்தில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பிய சச்சின், தனது என்னத்தை மற்றும் ஆசையை  பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

   ஆந்திராவில், நெல்லுார் மாவட்டம், கூடூர் அருகேயுள்ள புட்டம்ராஜிகண்டிகை என்ற குக்கிராமத்தை தத்து எடுக்க தேர்வு செய்தார்.. ஆயிரம் மக்கள் தொகை கொண்ட  இக்கிராமத்தை, சச்சின், தன் ராஜ்யசபா உறுப்பினர் நிதியில் இருந்து கிடைக்கும் தொகையில், பல அடிப்படை வசதிகளை, இங்கு வசிப்பவர்களுக்கு செய்து தர மேற்கொண்டார்.

இம்மாதம், 15ம் தேதி, மும்பையில் இருந்து, சென்னைக்கு வரும் சச்சின்டெண்டுல்கர் , 16ம் தேதி காலை கூடூர் பகுதிக்கு சென்று, புட்டம்ராஜிகண்டிகை கிராமத்தை பார்வையிட்டு, அங்கு வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து உள்ளார் , சர்வதேச தரத்தில் இந்த கிராமத்தை வளர்ச்சி அடையச் செய்ய விரும்பி, சச்சின் உத்தரவு படி, சில தினங்களாக, இக்கிராமத்தில் சாலை, குடிநீர், மின்மாற்றி, தெருவிளக்கு, பூமிக்குள் கழிவுநீர் கால்வாய், சுகாதாரம், மழைநீர் தேக்கத்திற்கான வசதி பணிகள், அக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.இதற்கான  மேற்பார்வை நெல்லுார் மாவட்ட ஆட்சியர் கண்காணித்து வருகிறார். 
பாஜக ஆட்சி அமைக்குமா ? இன்று ஆலோசனை

பாஜக ஆட்சி அமைக்குமா ? இன்று ஆலோசனை


கடந்த பிப்ரவரி மாதம் முதல் டில்லியில் ஜனாதிபதி ஆட்சிதான்  நடந்து வருகிறது.இந்நிலையில்  சட்டசபையை கலைக்க வேண்டும் என ஆம்ஆத்மி கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு  விசாரணைக்கு வந்த போது இங்கு தற்போது தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்துள்ளோம் என துணைநிலை ஆளுனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டியது தானே என்றும், முயற்சிக்கு சம்மதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் இன்னும் பா.ஜ.,வுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. 

 டில்லியில் ஆட்சி அமைப்பதா,தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது பா.ஜ.க .

  இந்நிலையில் பாஜக தலைவர்கள் கலந்து முடிவு எடுப்பார்கள். ஆம்ஆத்மி  இதில் ஆட்சி அமைத்தால் பெரும்பான்மை நிரூபிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. மேலும் இதற்கென முயற்சி செய்தால் எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கிட குதிரை பேரம் நடக்கிறது என்று விமர்சிக்க படுகிறது. இதற்கான கேள்விக்கு இன்று விடை தெரிந்து விடும். 
டில்லியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் பா.ஜ., அந்த முயற்சியில் தோல்வி அடைந்தால், டில்லி சட்டசபையைக் கலைப்பதோடு, டில்லியை மீண்டும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற திட்டமிட்டு வருகிறது என்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  நடக்க போவது என்னவென்று இன்று தெரியும்.. 
வானொலியில் பிரதமர் உறை; கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை

வானொலியில் பிரதமர் உறை; கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை

கருப்பு பணத்தை மீட்க கடும் நடவடிக்கை எடுக்க போவதாக அகில இந்திய வானொலியில் மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினர் . அவர் கூறுவதாவது,  தூய்மை இந்தியா திட்டம் நிறைவேற்ற இளைஞர்கள் விரும்புகின்றனர் . மற்றும் எல்லோரும் மோசமானவர்கள் என்ற என்னத்தை மாற்றவேண்டும் என வலியுறுத்தினர் . இவ்வாறு மக்களுக்கு நேரடியாக செல்லவேண்டும் என்பதற்காக அகில இந்திய வானொலியில் அவர் உரையாற்றினர் . 

Saturday, 1 November 2014

2013-2014 அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்டது 68 பில்லியன் டாலர்

2013-2014 அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்டது 68 பில்லியன் டாலர்


அமெரிக்க உளவு அமைப்புகள் 2013 -2014 ஆண்டில்  செலவிட்ட தொகை 68 பில்லியன் டாலர் (ரூ. 4.08 லட்சம் கோடி) என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
  அமெரிக்காவில் 17 உளவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில உள்நாட்டில் உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளுக்காக அந்நாட்டு அரசு செலவிட்ட மொத்ததொகைகுறித்தவிவரங்கள்வியாழக்கிழமைவெளியிடப்பட்டன. 2013 அக்டோபர் முதல் 2014 செப்டம்பர் வரையிலான கால அளவில், உளவு அமைப்புகளுக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான கால அளவை நிதி ஆண்டாக அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது.
   
இதில் சிஐஏ அமைப்பு மட்டுமே 50.5 பில்லியன் டாலர் ( ரூ. 3.03 லட்சம் கோடி) செலவிட்டுள்ளது. ராணுவ ரீதியான உளவுத் தகவல் சேகரிப்புத் திட்டங்களுக்கு 17.4 பில்லியன் டாலர் ( ரூ. 1,04,400 கோடி) செலவிடப்பட்டது. அதற்கு முந்தைய 2012-2013 நிதி ஆண்டின்போதும், உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை சுமார் 68 பில்லியன் டாலராகும் (சுமார் ரூ. 4,08,000 கோடி). ஆயினும், அந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதலில் ஒதுக்கீடு செய்த தொகை அதைவிட மிகக் கூடுதலாக இருந்தது.அரசின் செலவுக் குறைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, பல லட்சம் கோடி மதிப்பில் உளவு அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு பின்னர் குறைக்கப்பட்டது.அமைப்புவாரியாகவும் பயன்பாட்டுவாரியாகவும் விரிவான செலவு விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் இன்று தொடங்கியது

பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் இன்று தொடங்கியது

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் இன்று தொடங்கியது. இது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெறும். தற்போது உள்ளதை விட 4 மடங்கு அதிகம் உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 பாரதிய ஜனதா கட்சியில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்பவர்கள் 6 ஆண்டுகள் அக்கட்சியில் இருப்பார்கள் என தகவல் வெளியானது. விண்ணப்பப் படிவங்கள் மட்டுமல்லாது, இணையதளத்திலும் பதிவு செய்து உறுப்பினராகலாம் என்று பாஜக  தலைமை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி, இணையதளம் மூலம் பதிவு செய்கிறார். இரண்டாவதாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பதிவு செய்துகொள்கிறார். உறுப்பினர்களின் சேர்க்கைக்காக பிரத்யேக தொலைபேசி எண் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொள்பவர்களின் விவரங்கள் அந்தந்த இடத்தில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் இதன் மூலம் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் கட்சியில் சேராமல் தடுக்கப்படும் என்றும் தேசிய பொதுச்செயலாளர் நட்டா கூறியுள்ளார்.
நோக்கியா ஆலை மூடப்பட்டது

நோக்கியா ஆலை மூடப்பட்டது

நோக்கியா நிறுவன ஆலை முடபட்டுவிட்டது , கலையில் வேலைக்கு வந்த பணியாளர்கள் திரும்பி சென்றுவிட்டனர், மைக்ரோசொப்ட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இன்று மூடப்பட்டது .