Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, 5 November 2014

12  பேருக்கு நிபந்தனையில் ஜாமின்

12 பேருக்கு நிபந்தனையில் ஜாமின்

சென்னையில் கத்தி படம்  வெளியாக  கூடாது என திரையரங்குகளை தாக்கியதில் கைது செய்த 12 பேருக்கு   சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையில்   ஜாமின் வழங்கியது.

Friday, 31 October 2014

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - நடிகர் கார்த்திக்

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - நடிகர் கார்த்திக்

நடிகர் கார்த்திக் கும்  அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு நடந்து வருகிறது,  இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் கார்த்தி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தற்போது அவர் தனியாக தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகின ஆனால் அவர் தனது சொந்த வீட்டிலே இருப்பதாக கூறினார். 
  மேலும் அவர்  சென்னை, தேனாம்பேட்டை போலீசில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் குருப்பிருப்பது: ஆழ்வார்பேட்டையில் என் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. அந்த  சொத்தில் எனக்கு எந்த பங்கும்  கிடையாது என்று எனது சகோதரர் கணேசன் என்னை வெளியேறும்படி கூறுகிறார். மேலும் உயிரில்  எனது பெயரும் இல்லை. எனது சகோதரர் எனது சொத்தை மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து என் சொத்துக்களை மீட்டு தரும்படி கேட்டு கொள்கிறேன். 
  மேலும் எனக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிபிட்டுள்ளார்.. மேலும் அவர் . இன்னும் இரண்டு நாட்களில் என் சகோதரர் கணேசன் இந்த பிரச்னையை முடிக்க அவர் முன்வராவிட்டால் சட்டப்படி வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. நானும் அதே வீட்டில் தான் இப்போது வரை இருந்து வருகிறேன் என்று நடிகர்  கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Wednesday, 29 October 2014

கத்தி பட குழுவினர்களுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்

கத்தி பட குழுவினர்களுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்

சமீபத்தில் வெளியான கத்தி படம் விஜய்-யை  அல்லோல பட வைக்கிறது , கத்தி படத்தில் அவர் 2-ஜி ஊழலை அவர் வசனமாக பேசியிருப்பார் , ஆனால் அந்த வசனத்திற்காக ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றிருந்தது.
    ஆனால் இந்த 2-ஜி வழக்கு விசாரணையில் இருக்கையில் எப்படி இதை வசனமாக வைக்க முடியும் , என்று இந்த திரைப்பட குழுவினரிடம் மதுரை நிதிமன்றம் புகார் எழுப்பியுள்ளது . இந்த வழக்கு நிதிமன்றத்தில் இருக்கையில் இதற்கு திரைபடத்தில் திர்ப்பு வழங்குவது நிதித்துறையை அவமதிப்பதாக தெரியவருகிறது . அதனால் திரைப்பட குழுவினர்களுக்கு மதுரை நீதிமன்றம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

Tuesday, 21 October 2014

விஜய் படம் வெளியாக இருந்த திரையரங்குகளில் தாக்குதல்

விஜய் படம் வெளியாக இருந்த திரையரங்குகளில் தாக்குதல்

சென்னையில் நடிகர் விஜய் படங்கள் வெளியாக இருந்த திரையரங்குகளில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர் .  அவர்  நடித்த கத்தி படம் வரும் திபாவளிக்கு வெளியாக இருந்தது .இதற்கான முன் பதிவு நேற்றிரவு 11 மணி அளவில் சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இது  சமயம் இந்த கோர விளையாட்டால்  ரசிகர்கள் மனதில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.