Saturday, 25 October 2014

என்.எல்.சி போராட்டம் முடிவுக்கு வந்தது

SHARE
             என்.எல்.சி  ஒப்பந்த தொழிலாளர்கள் செப் 3 முதல் பணிநிரந்தரம் , ஊதிய உயர்வு போன்ற 6 அம்சங்களை கொண்ட போராட்டம் நடைபெற்றது , தற்போது அவை நிறைவேற்றப்பட்டு அணைத்து தொழிலாளர்களும் பணிக்கு புறப்பட்டனர் .

         தொழிலாளர் நல துறை முதன்மை ஆணையர் கந்தசாமி முன்னிலையில், மனிதவள முதன்மை மேலாளர் முத்து , பொது மேலாளர் பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது .
  53 நாளாக நடைபெற்ற இந்த போராட்டம், இன்று முடிவுக்கு வந்தது.


 பொது மேலாளர் பாலாஜி கூறுவது : ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு  480 ரூபாய் , பாதி தொழில்நுட்ப திறனுடைய தொழிலாளர்களுக்கு 500 ரூபாய் ,தொழில்நுட்ப திறனுடைய தொழிலாளர்களுக்கு 515 ரூபாய் ,உயர் தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு 525 ரூபாய் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது . இவை இந்த வருடம்  நவம்பர் 50 % மற்றும் 2015 நவம்பர் 50% எனவும் வழங்கப்படும் .    
SHARE

Author: verified_user

0 comments: