Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Wednesday, 5 November 2014

12  பேருக்கு நிபந்தனையில் ஜாமின்

12 பேருக்கு நிபந்தனையில் ஜாமின்

சென்னையில் கத்தி படம்  வெளியாக  கூடாது என திரையரங்குகளை தாக்கியதில் கைது செய்த 12 பேருக்கு   சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையில்   ஜாமின் வழங்கியது.
தங்கத்தின் விலை குறைவு, மக்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை குறைவு, மக்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280  குறைந்துள்ளது . ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 2422/-    சவரன் ரூ 19376/-  விற்க்கபடுகிறது  . சர்வதேச சந்தையில் தங்கத்தின்  விலை குறைந்துள்ளதே இதற்கு காரணம் என கருதபடுகிறது . கடந்த அக்டோபர்31-ம் தேதி தங்கத்தின் விலை 20,000 ரூபாய்க்கு கீழே செல்ல தொடங்கியது. அதனை தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதி 19,760-ஆகவும், நவம்பர் 2-ம் தேதி இந்த விலையில் 88 ரூபாயும், நவம்பர் 4-ம் தேதி 16 ரூபாயும் குறைந்து இருந்தது.

   இன்று தங்கத்தின் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. இதே போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளதது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.36.80  பைசவாகும், ஒரு கிலோ ரூ 34360/- ரூபாயாக விற்க்கபடுகிறது.  இதானால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Tuesday, 4 November 2014

அஷோபா என புதிய புயல். அதிர்ச்சி தகவல்

அஷோபா என புதிய புயல். அதிர்ச்சி தகவல்

அந்தமான் அருகே அஷோபா என  புதிய புயல் உருவாகி உள்ளது.

  அஷோபா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிரமடைந்து, ஆந்திரா, தமிழகத்தை அடுத்த மூன்று நாட்களில் தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம்அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அஷோபா புயல், வரும் 8 அல்லது 9ம் தேதிகளில் தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. 
    கடந்த மாதம் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு, ஹுட்ஹுட் என பெயரிடப்பட்டது. இந்த புயல், விசாகப்பட்டனம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால், ஆந்திர கடலோர பகுதிகளில் கடுமையான பாதிப்பு  ஏற்பட்டது... இந்த முறை இலங்கை பெயர் சூட்டி உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ள. இது குறித்து விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம் வௌியிட்டுள்ள தகவலில், 'தற்போது, விசாகப்பட்டனத்தில் இருந்து 1400 கி.மீ., தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது வலுவடைந்து புயலாக மாறும். அடுத்த மூன்று தினங்களில் அது கரையை கடக்கும். புயல் தொலைவில் நிலை கொண்டிருப்பதால், அது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை தற்போது கூற முடியாது. புயல் நெருங்கியவுடன் அது குறித்த தகவல் வௌியிடப்படும்.
 வங்க கடலில் அந்தமான் அருகேயும், இலங்கை அருகேயும் புயல் சின்னங்கள் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வௌியிட்டுள்ள தகவலில், 'இலங்கை அருகே காற்றின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யா வாய்ப்பு உள்ளதாக தெரிவிகின்றனர்.

Saturday, 1 November 2014

நோக்கியா ஆலை மூடப்பட்டது

நோக்கியா ஆலை மூடப்பட்டது

நோக்கியா நிறுவன ஆலை முடபட்டுவிட்டது , கலையில் வேலைக்கு வந்த பணியாளர்கள் திரும்பி சென்றுவிட்டனர், மைக்ரோசொப்ட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இன்று மூடப்பட்டது .

Friday, 31 October 2014

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து உள்ளது.  இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சரி கட்டி லாபத்தை ஈட்டி வருகின்றது. இதனால்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.43ம் குறைக்கப்படுள்ளது.

   இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதலே நாடு முழுவதும் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.59ல் இருந்து ரூ.67.01 ஆக விலை சரியபடுள்ளது . டீசல் லிட்டருக்கு ரூ.59.27ல் இருந்து 56.84 ஆக சரியபட்டுள்ளது . 
 

   பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த முறை வரை  6வது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இவை , காஷ்மீர், ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பினை சாதகமான பா.ஜ.க  தலைவர்கள் கருதபடுவதாக தெரியபடுகிறது.
ஏ-டி-ம் 5 முறைக்கு மேல் பணம் எடுபவர்களுக்கு கட்டணம் .

ஏ-டி-ம் 5 முறைக்கு மேல் பணம் எடுபவர்களுக்கு கட்டணம் .

ஏ-டி-ம் மூலம் பணம் எடுப்பவர்களுக்கு கவனம்:   உங்களது வங்கி கணக்கில்  இருந்து பணம் எடுக்க மாதம்  5 முறைக்கு மேல் ஏ.டி.எம்-யை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
  டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்  ஆகிய பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று முதல் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து மாதம் 5 முறை மட்டுமே ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுத்தல், பணம் இருப்பு விவரம் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளை இலவசமாக தெரிந்துகொள்ள முடியும். அதற்க்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ 20 கட்டணமாக வசூலிக்க படும் .

இதே போன்று மற்ற வங்கி ஏ.டி.எம்களில்  இருந்து 3 முறை கட்டணம் இல்லாமல்  பணம் எடுக்கலாம்.கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம் மூலம் 5 முறைக்கு மேலும், மற்ற வங்கி ஏ.டி.எம்  மூலம் 3 முறைக்கு மேலும் நடைபெறும் ஒவ்வொரு உபரி பரிவர்த்தனைக்கும் வங்கி இருப்பிலிருந்து ரூ.20 பிடித்தம் செய்யப்படும்.  

  ஆனால் இந்த பிடித்தம் குறிபிட்டுள்ள 6 பெருநகரங்களில் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது. மற்ற நகரங்களில்  உள்ள ஏ.டி.எம் களில் ஏற்கனவே உள்ளபடி வாடிக்கையாளர்கள் சேவையை பெறலாம். கணக்கு வைத்திருக்கும் ஏ.டி.எம்களில் இருந்து முற்றிலும் இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. .
காலவரையற்ற வேலை நிறுத்தம் : மீனவர் சங்கம்

காலவரையற்ற வேலை நிறுத்தம் : மீனவர் சங்கம்

தமிழக மீனவர்களை தூக்கிலிருந்து காப்பாற்ற காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வர மீனவர்கள் சங்கத்தில் முடிவெடுத்துள்ளது என தகவல் வெளியாகிறது . அதில் நவம்பர் 6 ஆம் தேதிக்குள் மீட்க்க படவில்லை என்றால், நவம்பர் 7 ஆம் தேதி முதல் அணைத்து சங்ககளுடன் ஆலோசனை நடைபெறும். இதில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக கூடத்தில் முடிவு எடுக்க படும் என கூரபடுகின்றனர். 

Thursday, 30 October 2014

இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு  தூக்கு தண்டனை

இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்தியதாக கடந்த 2011-ல் வழக்கு தொடங்கப்பட்டது , அந்த வழக்கில் 8 பேர் கைதாகினர், அதில் 5பேர் தமிழக மீனவர்கள் , 3 பேர் இலங்கை மீனவர்கள் . இவர்களுக்கு கொழும்பு நகர நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது .
      தூக்கு தண்டனை விதிக்க பட்டவர்கள் 5 பேர் தமிழக மீனவர்கள்.  ராமநாதபுரம் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் .  இந்த  தூக்கு தண்டனை வழங்கியதை கேட்டது ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
      

Wednesday, 29 October 2014

விசாகபட்டினம் முதல் சென்னைக்கு கப்பல்

விசாகபட்டினம் முதல் சென்னைக்கு கப்பல்

விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக  கப்பல் விட ஆசிய வங்கி ஆந்திர அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 

இது , சுற்றுலா, சரக்கு போக்குவரத்து இரண்டையும் மாநிலங்களுக்கு இடையில் கொண்டுசெல்லும்  வகையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு கப்பல் விட ஆசிய வங்கி ஆலோசனை கூறியுள்ளது . பாக்ஜலசந்தி வழியாக இந்த கப்பல் போக்குவரத்தில் படகு வீடுகள், தீம் பார்க் என்று சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக  இடம்பெறும் என்றும் தெரியவருகிறது.
ஆசிய வங்கி , சரக்கு போக்குவரத்தும் எளிதாக இருக்கும் எனவும்  6 வழி சாலைகள் இந்த கப்பல் போக்குவரத்துக்காக அமைக்கப்படவும் ஆலோசனை
கூறியுள்ளது . உடனடியாக இதை செயல்படுத்த ஆசிய வங்கி  ஆந்திர அரசிடம் குறிபிட்டுள்ளது .


Saturday, 25 October 2014

ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த படுகிறது

ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த படுகிறது

             புதிய முதல்வர் ஆட்சிக்கு வந்த பின்பு  நிர்வாகம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு  மக்களிடையே பெருமளவில் காணப்பட்டது . அதன் புதிய விளைவாக ஆவின் பால் விலையை உயர்த்தி முதலைமைச்சர் பன்னிர்செல்வம் உத்தரவிட்டுள்ளார் . 

           லிட்டர் பால் விலை 24 ல் இருந்து 34 ஆக உயர்கிறது . பால் விலை உயர்வதால் டீ ,காபி விலை அதிகமாகும் . குடும்ப பெண்களும் , ஏழை மக்களும் நேரடியாக பதிக்க படுகின்றனர் . இன்னும் பெரும்பாலானவர்கள், கிராமங்களில் இருந்து பக்கத்தில் உள்ள நகரத்திற்கு சென்றால் டீ யும் காப்பியும் நம்பியே செல்கின்றனர் .
   
  
              இது குறித்து அரசு விளக்குவது : பால் விலை உயர்வால் 22.2 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனைடைவர்கள் எனவும் தனியார் பால் விலையை விட இந்த விலை குறைவுதான் என ஒப்பிட்டுள்ளார் .விற்பனை விலையை பொறுத்தவரை தனியார் பால்  விலை மற்றும் இதர மாநில கூட்டுறவு பால் விலையோடு ஒப்பிடும்போது  ஆவின் பால் விலை மிகவும் குறைவாகும் .

            இதனை கருத்தில் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களின் பொருளாதார் நிலை மற்றும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் பண பரிமாற்றம் எந்த வகையிலும் பதிக்க கூடாது என்பதை நோக்கி அதே சமயம் நுகர்வோருக்கு நல்ல தரமுள்ள பால் விற்பனை செய்வதையும் உறுதி படுத்தும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்த படாமல் இருந்த ஆவின் பால்  விற்பனை விலை உயர்த்த பட வேண்டியம் அவசியம் ஏற்பட்டுள்ளது . 1 லிட்டர் பதபடுதப்பட்ட பால் ரூ.24 லில் இருந்து ரூ.34 ஆக உயர்கிறது .லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த படுகிறது . இந்த விலை உயர்வு வரும் நவ 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது .
என்.எல்.சி  போராட்டம் முடிவுக்கு வந்தது

என்.எல்.சி போராட்டம் முடிவுக்கு வந்தது

             என்.எல்.சி  ஒப்பந்த தொழிலாளர்கள் செப் 3 முதல் பணிநிரந்தரம் , ஊதிய உயர்வு போன்ற 6 அம்சங்களை கொண்ட போராட்டம் நடைபெற்றது , தற்போது அவை நிறைவேற்றப்பட்டு அணைத்து தொழிலாளர்களும் பணிக்கு புறப்பட்டனர் .

         தொழிலாளர் நல துறை முதன்மை ஆணையர் கந்தசாமி முன்னிலையில், மனிதவள முதன்மை மேலாளர் முத்து , பொது மேலாளர் பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது .
  53 நாளாக நடைபெற்ற இந்த போராட்டம், இன்று முடிவுக்கு வந்தது.


 பொது மேலாளர் பாலாஜி கூறுவது : ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு  480 ரூபாய் , பாதி தொழில்நுட்ப திறனுடைய தொழிலாளர்களுக்கு 500 ரூபாய் ,தொழில்நுட்ப திறனுடைய தொழிலாளர்களுக்கு 515 ரூபாய் ,உயர் தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு 525 ரூபாய் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது . இவை இந்த வருடம்  நவம்பர் 50 % மற்றும் 2015 நவம்பர் 50% எனவும் வழங்கப்படும் .    

Tuesday, 21 October 2014

விஜய் படம் வெளியாக இருந்த திரையரங்குகளில் தாக்குதல்

விஜய் படம் வெளியாக இருந்த திரையரங்குகளில் தாக்குதல்

சென்னையில் நடிகர் விஜய் படங்கள் வெளியாக இருந்த திரையரங்குகளில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர் .  அவர்  நடித்த கத்தி படம் வரும் திபாவளிக்கு வெளியாக இருந்தது .இதற்கான முன் பதிவு நேற்றிரவு 11 மணி அளவில் சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இது  சமயம் இந்த கோர விளையாட்டால்  ரசிகர்கள் மனதில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Monday, 20 October 2014

காவல் நிலையங்களில்  சிசிடிவி கேமரா

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா


காவல் நிலையங்களில்  சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.   காவல் நிலைய மரணத்தை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என கூறினார் .மனுவை நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சசிதரன் அமர்வு விசாரித்தனர்.  விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 29ம்தேதி கலந்தாய்வு

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 29ம்தேதி கலந்தாய்வு

 குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  கலந்தாய்வு வரும் 29ம்தேதி தொடங்குகிறது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை3,  2013-14ம் ஆண்டு பதவிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம்தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு வரும் 29ம்தேதி முதல் நவம்பர் 1ம்தேதி வரை நடைபெறுகிறது.  காலை  8.30மணியிலிருந்து கலந்தாய்வும் நடைபெறும், 10மணி முதல் சான்றிதழ் சரிபார்ப்பும், இவை பிரேசர் பாலச் சாலை, வ.உ.சி நகர் (பிராட்வே பேருந்து நிலையம் அருகில்) சென்னை3 என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 




ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கம் அவதி

ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கம் அவதி

ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கம் அவதி


        அதிகளவில், ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கள் புகார் . சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாமல் ஆட்டோ ஒட்டுவதால் பயணியிடம் அதிகமாக கட்டணம் வசூலிகின்றனர். அதை மக்கள் கேட்கும் போது  இது மலை காலம் , தீபாவளி நேரம் மிட்டர்  ஓடவில்லை என சறுக்கு சொல்வதாக கூறினார்கள் .