குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு வரும் 29ம்தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை3, 2013-14ம் ஆண்டு பதவிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம்தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு வரும் 29ம்தேதி முதல் நவம்பர் 1ம்தேதி வரை நடைபெறுகிறது. காலை 8.30மணியிலிருந்து கலந்தாய்வும் நடைபெறும், 10மணி முதல் சான்றிதழ் சரிபார்ப்பும், இவை பிரேசர் பாலச் சாலை, வ.உ.சி நகர் (பிராட்வே பேருந்து நிலையம் அருகில்) சென்னை3 என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
0 comments: