Showing posts with label வானிலை. Show all posts
Showing posts with label வானிலை. Show all posts

Tuesday, 4 November 2014

அஷோபா என புதிய புயல். அதிர்ச்சி தகவல்

அஷோபா என புதிய புயல். அதிர்ச்சி தகவல்

அந்தமான் அருகே அஷோபா என  புதிய புயல் உருவாகி உள்ளது.

  அஷோபா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிரமடைந்து, ஆந்திரா, தமிழகத்தை அடுத்த மூன்று நாட்களில் தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம்அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அஷோபா புயல், வரும் 8 அல்லது 9ம் தேதிகளில் தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. 
    கடந்த மாதம் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு, ஹுட்ஹுட் என பெயரிடப்பட்டது. இந்த புயல், விசாகப்பட்டனம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால், ஆந்திர கடலோர பகுதிகளில் கடுமையான பாதிப்பு  ஏற்பட்டது... இந்த முறை இலங்கை பெயர் சூட்டி உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ள. இது குறித்து விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம் வௌியிட்டுள்ள தகவலில், 'தற்போது, விசாகப்பட்டனத்தில் இருந்து 1400 கி.மீ., தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது வலுவடைந்து புயலாக மாறும். அடுத்த மூன்று தினங்களில் அது கரையை கடக்கும். புயல் தொலைவில் நிலை கொண்டிருப்பதால், அது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை தற்போது கூற முடியாது. புயல் நெருங்கியவுடன் அது குறித்த தகவல் வௌியிடப்படும்.
 வங்க கடலில் அந்தமான் அருகேயும், இலங்கை அருகேயும் புயல் சின்னங்கள் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வௌியிட்டுள்ள தகவலில், 'இலங்கை அருகே காற்றின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யா வாய்ப்பு உள்ளதாக தெரிவிகின்றனர்.

Tuesday, 21 October 2014

தமிழகத்தில் மழை, விவசாயிகள் அச்சம்

தமிழகத்தில் மழை, விவசாயிகள் அச்சம்

தமிழகத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது , சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணபடுகிறது.  புதுகோட்டை , சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யாத ? என எதிர்பார்த்திருந்த விவசாயிகளின் மனம் குளிரபட்டது . அதே சமயம் மழை  அதிகமாக பெய்வதால் பயிர்கள் பாதிக்கப்படுமோ என விவசாயிகள்  அச்ச படுகின்றனர் ..

           சென்னையில் பெரும் மழையால் ரோட்டோரங்களில் இருந்த கடைகள் அகற்ற பட்டனர். தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது , அதனை நகராட்சி கண்டுகொள்ளவில்லை என மக்கள் வருதபடுகின்றனர் .      

Monday, 20 October 2014

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் மழை  அதிகளவில் காணபடுகிறது . தென்மேற்கு வங்கக்கடலில் கற்றலுதம் அதிகமாவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை  பெய்யும் .  தொடர் மழை பெய்வதால் ஆங்கங்கே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க பட்டது . நாமக்கல் மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்து வருகிறது . சென்னையில் மேகமூட்டமாக  காணபடுகிறது.