Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, 4 November 2014

பொருளாதாரத்தை சரி செய்ய கால அவகாசம் ஆகலாம் !

பொருளாதாரத்தை சரி செய்ய கால அவகாசம் ஆகலாம் !

இந்தியாவின் பொருளாதாரத்தை சரி செய்ய இன்னும் கால அவகாசம் அகாலம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
   இந்தியா முதளிட்டார்களின் பார்வைக்கு தென்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார் . 
மோடி-ஒபாமா சந்திக்க வாய்ப்பு

மோடி-ஒபாமா சந்திக்க வாய்ப்பு

 இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா இருவரும் மீண்டும்  சந்திக்க இருப்பதாக  தெரியவருகிறது. அடுத்த வாரம் கிழக்கு ஆசிய நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக  அமெரிக்க அதிபர் ஒபாமா செல்கிறார் . சீனா, மியான்மர் , ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இதனிடையே  வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபக்பொருளாதார மாநாடு நடைபெற உள்ளது, இதனையடுத்து மியான்மர் நாட்டில் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் அமெரிக்க ஆசியன் உச்சி மாநாட்டிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார் ஒபாமா . 


  அடுத்தாண்டு மியான்மரில் நடைபெற உள்ள பொது தேர்தலில் முக்கிய எதிர்கட்சி தலைவரான ஆங்சாங்சூயி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கபடுகிறது. இதனையடுத்து ஆங்சாங்சூயி ஒபாமா சந்திப்பு நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கு பெற உள்ளார்.இதனிடையே இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கருதபடுகிறது.   முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற சென்றார் மேலும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியதை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. .

Sunday, 2 November 2014

பாஜக ஆட்சி அமைக்குமா ? இன்று ஆலோசனை

பாஜக ஆட்சி அமைக்குமா ? இன்று ஆலோசனை


கடந்த பிப்ரவரி மாதம் முதல் டில்லியில் ஜனாதிபதி ஆட்சிதான்  நடந்து வருகிறது.இந்நிலையில்  சட்டசபையை கலைக்க வேண்டும் என ஆம்ஆத்மி கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு  விசாரணைக்கு வந்த போது இங்கு தற்போது தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்துள்ளோம் என துணைநிலை ஆளுனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டியது தானே என்றும், முயற்சிக்கு சம்மதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் இன்னும் பா.ஜ.,வுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. 

 டில்லியில் ஆட்சி அமைப்பதா,தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது பா.ஜ.க .

  இந்நிலையில் பாஜக தலைவர்கள் கலந்து முடிவு எடுப்பார்கள். ஆம்ஆத்மி  இதில் ஆட்சி அமைத்தால் பெரும்பான்மை நிரூபிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. மேலும் இதற்கென முயற்சி செய்தால் எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கிட குதிரை பேரம் நடக்கிறது என்று விமர்சிக்க படுகிறது. இதற்கான கேள்விக்கு இன்று விடை தெரிந்து விடும். 
டில்லியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் பா.ஜ., அந்த முயற்சியில் தோல்வி அடைந்தால், டில்லி சட்டசபையைக் கலைப்பதோடு, டில்லியை மீண்டும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற திட்டமிட்டு வருகிறது என்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  நடக்க போவது என்னவென்று இன்று தெரியும்.. 

Friday, 31 October 2014

மோடி முன்னிலையில் பதவியேர்ப்பு விழா

மோடி முன்னிலையில் பதவியேர்ப்பு விழா

மராட்டிய மாநிலத்தில் 27 ஆவது முதல்வராக தேவேந்திர பட்னவிஸ்  பதவியேற்றர். இந்த பதவியேற்ப்பு விழா மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது இதில் சுமார் 40000 பேர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.  மராட்டிய மாநிலத்தில்  பாஜக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும். இவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இது மோடி முன்னிலையில் பதவியேற்ப்பு விழா நடைபெற்றது . விழாவிற்கு சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும்  எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டனர் . 

Thursday, 30 October 2014

ஞானதேசிகன் தனது ராஜினாமா முடிவு குறித்து பேசினார்

ஞானதேசிகன் தனது ராஜினாமா முடிவு குறித்து பேசினார்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனது ராஜினாமா முடிவு குறித்து அவர் கூறினார் . மாநில அளவில் கட்சி சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் டெல்லி மேலிடத்திற்கு உண்டு என்றாலும், கட்சியின் வளர்ச்சி குறித்து மாநில தலைவர்களை ஆலோசிக்க வேண்டும். கட்சி நலனுக்காக பல சங்கடங்களை சமாளித்துள்ளேன் என்றும் பல கவலைகள், சங்கடங்கள் எனக்கு இருக்கிது என்று கூறினார், இதனால் தனது ராஜனாமா முடிவு எடுபதாக அவர் கூறியுள்ளார் .