Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Wednesday, 5 November 2014

பிரதமர் மோடி 15 ஆவது இடத்தை  பிடித்தார்

பிரதமர் மோடி 15 ஆவது இடத்தை பிடித்தார்

 அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் உலக அளவில் புகழ்பெற்றவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் செல்வாக்கு மற்றும் புகழ் இன்னும் சில விதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 15 ஆவது இடத்தை பிடித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த வருடம் இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 72 தலைவர்கள் பல்வேறு முறையின்  கீழ் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் முதலிடத்திலும், அமெரிக்க அதிபர் ஓபாமா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

 சீன அதிபர் ஷின்ஜின்பிங் 3-வது இடம், போப் பிரான்சிஸ் 4-வது இடம், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 5-வது இடமும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் நமது இந்திய பிரதமர் மோடி 15 வது இடத்தில் உள்ளார். இதே போல  இந்தியாவை சேர்ந்த அனில் அம்பானி 36-வது இடத்திலும் , ஆர்சிலர் மிட்டல் நிறுவத்தின் தலைமை நிர்வாகியான லட்சுமி மிட்டல் 57-வது இடத்திலும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர் சத்யநாதெல்லா 64-வது இடத்தையும் பெற்றுள்ளனர். என்ற பெருமை நமக்கு கிடைத்துள்ளது.
பிரதமருக்கு பக்-தீவிரவாத இயக்கம்  கொலை மிரட்டல்

பிரதமருக்கு பக்-தீவிரவாத இயக்கம் கொலை மிரட்டல்

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வாகா எல்லையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் அறுபதுக்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தனர்.    

  இத்தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாத குழுவிலிருந்து பிரிந்த தெஹ்ரிக் ஏ தாலிபான் பாகிஸ்தான்  ஜமாத் உல் அஹ்ரர் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பெற்றள்ளது.  வாகா தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள மோடிக்கு பதிலளிக்கும் விதமாக, ட்விட்டரில் அந்த தீவிரவாத குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக கருதப்படும் இசானுல்லா இசான் என்பவன் இந்த மிரட்டலை விடுத்துள்ளான். 

  நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர் மோடி என்று குறிப்பிட்டுள்ள அவர், காஷ்மீர் மற்றும் குஜராத் அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு பழிவாங்குவோம் என்று கூறியுள்ளார் . இந்த மிரட்டலையடுத்து உளவுத்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு இருந்த  காரணத்தால் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த முடியாமல் போனதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   மேலும் உளவு துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Tuesday, 4 November 2014

மோடி-ஒபாமா சந்திக்க வாய்ப்பு

மோடி-ஒபாமா சந்திக்க வாய்ப்பு

 இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா இருவரும் மீண்டும்  சந்திக்க இருப்பதாக  தெரியவருகிறது. அடுத்த வாரம் கிழக்கு ஆசிய நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக  அமெரிக்க அதிபர் ஒபாமா செல்கிறார் . சீனா, மியான்மர் , ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இதனிடையே  வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபக்பொருளாதார மாநாடு நடைபெற உள்ளது, இதனையடுத்து மியான்மர் நாட்டில் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் அமெரிக்க ஆசியன் உச்சி மாநாட்டிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார் ஒபாமா . 


  அடுத்தாண்டு மியான்மரில் நடைபெற உள்ள பொது தேர்தலில் முக்கிய எதிர்கட்சி தலைவரான ஆங்சாங்சூயி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கபடுகிறது. இதனையடுத்து ஆங்சாங்சூயி ஒபாமா சந்திப்பு நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கு பெற உள்ளார்.இதனிடையே இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கருதபடுகிறது.   முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற சென்றார் மேலும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியதை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. .

Saturday, 1 November 2014

2013-2014 அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்டது 68 பில்லியன் டாலர்

2013-2014 அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்டது 68 பில்லியன் டாலர்


அமெரிக்க உளவு அமைப்புகள் 2013 -2014 ஆண்டில்  செலவிட்ட தொகை 68 பில்லியன் டாலர் (ரூ. 4.08 லட்சம் கோடி) என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
  அமெரிக்காவில் 17 உளவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில உள்நாட்டில் உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளுக்காக அந்நாட்டு அரசு செலவிட்ட மொத்ததொகைகுறித்தவிவரங்கள்வியாழக்கிழமைவெளியிடப்பட்டன. 2013 அக்டோபர் முதல் 2014 செப்டம்பர் வரையிலான கால அளவில்உளவு அமைப்புகளுக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான கால அளவை நிதி ஆண்டாக அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது.
   
இதில் சிஐஏ அமைப்பு மட்டுமே 50.5 பில்லியன் டாலர் ( ரூ. 3.03 லட்சம் கோடி) செலவிட்டுள்ளது. ராணுவ ரீதியான உளவுத் தகவல் சேகரிப்புத் திட்டங்களுக்கு 17.4 பில்லியன் டாலர் ( ரூ. 1,04,400 கோடி) செலவிடப்பட்டது. அதற்கு முந்தைய 2012-2013 நிதி ஆண்டின்போதும்உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை சுமார் 68 பில்லியன் டாலராகும் (சுமார் ரூ. 4,08,000 கோடி). ஆயினும்அந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதலில் ஒதுக்கீடு செய்த தொகை அதைவிட மிகக் கூடுதலாக இருந்தது.அரசின் செலவுக் குறைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, பல லட்சம் கோடி மதிப்பில் உளவு அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு பின்னர் குறைக்கப்பட்டது.அமைப்புவாரியாகவும் பயன்பாட்டுவாரியாகவும் விரிவான செலவு விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.