Showing posts with label aircel. Show all posts
Showing posts with label aircel. Show all posts

Wednesday, 29 October 2014

மாறன் நேரில் ஆஜராக சம்மன்

மாறன் நேரில் ஆஜராக சம்மன்

மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் கலாநிதி மாறன் ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில், டெல்லி சிபிஐ நீதிமன்றம் வரும் மார்ச் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி அவர்கள் முன்னிலையில்   இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப கோரிக்கை விடுத்திருந்தது. இதனை நீதிமன்றம், கலாநிதிமாறன் மற்றும் தயாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்தகிருஷ்ணன், அதே நிறுவனத்தின் தலைமைச் செயலர்  ரால்ப் மார்ஷல் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.மேலும் இன்னும் நான்கு நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
  
aircel maxis scam ஏர்செல் தயாநிதிமாறன் முறைகேடு

2006 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் சொல்லியதாக  புகார் எழுந்தது.


ஏர்செல்லின் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றதற்கான  பலனாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் மூன்று ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் விளியிட்டுள்ளது .