Saturday 1 November 2014

பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் இன்று தொடங்கியது

SHARE
பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் இன்று தொடங்கியது. இது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெறும். தற்போது உள்ளதை விட 4 மடங்கு அதிகம் உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 பாரதிய ஜனதா கட்சியில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்பவர்கள் 6 ஆண்டுகள் அக்கட்சியில் இருப்பார்கள் என தகவல் வெளியானது. விண்ணப்பப் படிவங்கள் மட்டுமல்லாது, இணையதளத்திலும் பதிவு செய்து உறுப்பினராகலாம் என்று பாஜக  தலைமை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி, இணையதளம் மூலம் பதிவு செய்கிறார். இரண்டாவதாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பதிவு செய்துகொள்கிறார். உறுப்பினர்களின் சேர்க்கைக்காக பிரத்யேக தொலைபேசி எண் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொள்பவர்களின் விவரங்கள் அந்தந்த இடத்தில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் இதன் மூலம் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் கட்சியில் சேராமல் தடுக்கப்படும் என்றும் தேசிய பொதுச்செயலாளர் நட்டா கூறியுள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: