Tuesday 4 November 2014

அஷோபா என புதிய புயல். அதிர்ச்சி தகவல்

SHARE
அந்தமான் அருகே அஷோபா என  புதிய புயல் உருவாகி உள்ளது.

  அஷோபா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிரமடைந்து, ஆந்திரா, தமிழகத்தை அடுத்த மூன்று நாட்களில் தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம்அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அஷோபா புயல், வரும் 8 அல்லது 9ம் தேதிகளில் தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. 
    கடந்த மாதம் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு, ஹுட்ஹுட் என பெயரிடப்பட்டது. இந்த புயல், விசாகப்பட்டனம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால், ஆந்திர கடலோர பகுதிகளில் கடுமையான பாதிப்பு  ஏற்பட்டது... இந்த முறை இலங்கை பெயர் சூட்டி உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ள. இது குறித்து விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம் வௌியிட்டுள்ள தகவலில், 'தற்போது, விசாகப்பட்டனத்தில் இருந்து 1400 கி.மீ., தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது வலுவடைந்து புயலாக மாறும். அடுத்த மூன்று தினங்களில் அது கரையை கடக்கும். புயல் தொலைவில் நிலை கொண்டிருப்பதால், அது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை தற்போது கூற முடியாது. புயல் நெருங்கியவுடன் அது குறித்த தகவல் வௌியிடப்படும்.
 வங்க கடலில் அந்தமான் அருகேயும், இலங்கை அருகேயும் புயல் சின்னங்கள் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வௌியிட்டுள்ள தகவலில், 'இலங்கை அருகே காற்றின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யா வாய்ப்பு உள்ளதாக தெரிவிகின்றனர்.
SHARE

Author: verified_user

0 comments: