Friday 31 October 2014

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து உள்ளது.  இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சரி கட்டி லாபத்தை ஈட்டி வருகின்றது. இதனால்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.43ம் குறைக்கப்படுள்ளது.

   இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதலே நாடு முழுவதும் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.59ல் இருந்து ரூ.67.01 ஆக விலை சரியபடுள்ளது . டீசல் லிட்டருக்கு ரூ.59.27ல் இருந்து 56.84 ஆக சரியபட்டுள்ளது . 
 

   பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த முறை வரை  6வது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இவை , காஷ்மீர், ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பினை சாதகமான பா.ஜ.க  தலைவர்கள் கருதபடுவதாக தெரியபடுகிறது.
ஏ-டி-ம் 5 முறைக்கு மேல் பணம் எடுபவர்களுக்கு கட்டணம் .

ஏ-டி-ம் 5 முறைக்கு மேல் பணம் எடுபவர்களுக்கு கட்டணம் .

ஏ-டி-ம் மூலம் பணம் எடுப்பவர்களுக்கு கவனம்:   உங்களது வங்கி கணக்கில்  இருந்து பணம் எடுக்க மாதம்  5 முறைக்கு மேல் ஏ.டி.எம்-யை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
  டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்  ஆகிய பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று முதல் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து மாதம் 5 முறை மட்டுமே ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுத்தல், பணம் இருப்பு விவரம் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளை இலவசமாக தெரிந்துகொள்ள முடியும். அதற்க்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ 20 கட்டணமாக வசூலிக்க படும் .

இதே போன்று மற்ற வங்கி ஏ.டி.எம்களில்  இருந்து 3 முறை கட்டணம் இல்லாமல்  பணம் எடுக்கலாம்.கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம் மூலம் 5 முறைக்கு மேலும், மற்ற வங்கி ஏ.டி.எம்  மூலம் 3 முறைக்கு மேலும் நடைபெறும் ஒவ்வொரு உபரி பரிவர்த்தனைக்கும் வங்கி இருப்பிலிருந்து ரூ.20 பிடித்தம் செய்யப்படும்.  

  ஆனால் இந்த பிடித்தம் குறிபிட்டுள்ள 6 பெருநகரங்களில் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது. மற்ற நகரங்களில்  உள்ள ஏ.டி.எம் களில் ஏற்கனவே உள்ளபடி வாடிக்கையாளர்கள் சேவையை பெறலாம். கணக்கு வைத்திருக்கும் ஏ.டி.எம்களில் இருந்து முற்றிலும் இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. .
மோடி முன்னிலையில் பதவியேர்ப்பு விழா

மோடி முன்னிலையில் பதவியேர்ப்பு விழா

மராட்டிய மாநிலத்தில் 27 ஆவது முதல்வராக தேவேந்திர பட்னவிஸ்  பதவியேற்றர். இந்த பதவியேற்ப்பு விழா மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது இதில் சுமார் 40000 பேர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.  மராட்டிய மாநிலத்தில்  பாஜக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும். இவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இது மோடி முன்னிலையில் பதவியேற்ப்பு விழா நடைபெற்றது . விழாவிற்கு சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும்  எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டனர் . 
காலவரையற்ற வேலை நிறுத்தம் : மீனவர் சங்கம்

காலவரையற்ற வேலை நிறுத்தம் : மீனவர் சங்கம்

தமிழக மீனவர்களை தூக்கிலிருந்து காப்பாற்ற காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வர மீனவர்கள் சங்கத்தில் முடிவெடுத்துள்ளது என தகவல் வெளியாகிறது . அதில் நவம்பர் 6 ஆம் தேதிக்குள் மீட்க்க படவில்லை என்றால், நவம்பர் 7 ஆம் தேதி முதல் அணைத்து சங்ககளுடன் ஆலோசனை நடைபெறும். இதில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக கூடத்தில் முடிவு எடுக்க படும் என கூரபடுகின்றனர். 
சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - நடிகர் கார்த்திக்

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - நடிகர் கார்த்திக்

நடிகர் கார்த்திக் கும்  அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு நடந்து வருகிறது,  இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் கார்த்தி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தற்போது அவர் தனியாக தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகின ஆனால் அவர் தனது சொந்த வீட்டிலே இருப்பதாக கூறினார். 
  மேலும் அவர்  சென்னை, தேனாம்பேட்டை போலீசில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் குருப்பிருப்பது: ஆழ்வார்பேட்டையில் என் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. அந்த  சொத்தில் எனக்கு எந்த பங்கும்  கிடையாது என்று எனது சகோதரர் கணேசன் என்னை வெளியேறும்படி கூறுகிறார். மேலும் உயிரில்  எனது பெயரும் இல்லை. எனது சகோதரர் எனது சொத்தை மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து என் சொத்துக்களை மீட்டு தரும்படி கேட்டு கொள்கிறேன். 
  மேலும் எனக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிபிட்டுள்ளார்.. மேலும் அவர் . இன்னும் இரண்டு நாட்களில் என் சகோதரர் கணேசன் இந்த பிரச்னையை முடிக்க அவர் முன்வராவிட்டால் சட்டப்படி வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. நானும் அதே வீட்டில் தான் இப்போது வரை இருந்து வருகிறேன் என்று நடிகர்  கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்

இலங்கை தூதரகத்தை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு தலைவர் வேல்முருகன் தலைமையில் 400 பேர் முற்றுகையிட முயன்றனர். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பை கண்டித்து முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கபட்டுருகின்றனர் .  

Thursday 30 October 2014

ஞானதேசிகன் தனது ராஜினாமா முடிவு குறித்து பேசினார்

ஞானதேசிகன் தனது ராஜினாமா முடிவு குறித்து பேசினார்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனது ராஜினாமா முடிவு குறித்து அவர் கூறினார் . மாநில அளவில் கட்சி சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் டெல்லி மேலிடத்திற்கு உண்டு என்றாலும், கட்சியின் வளர்ச்சி குறித்து மாநில தலைவர்களை ஆலோசிக்க வேண்டும். கட்சி நலனுக்காக பல சங்கடங்களை சமாளித்துள்ளேன் என்றும் பல கவலைகள், சங்கடங்கள் எனக்கு இருக்கிது என்று கூறினார், இதனால் தனது ராஜனாமா முடிவு எடுபதாக அவர் கூறியுள்ளார் .
பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு

பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு

சர்வதேச அளவில் கச்சா என்னை விலை குறைந்துள்ளதால் , பெட்ரோல்,டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது .

 கடந்த 18ஆம் தேதி டீசல் விலை 3.37 காசு குறைந்தது , இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை  2.50காசுகள் வரை குறையலாம் என எதிர்பக்கபடுகிறது . இதுகுறித்து நாளை மத்திய அரசு தீர்மானிக்கும் என நம்பபடுகிறது .
    இனி வரவிருக்கும் ஜம்முகாஷ்மீர்  ஜார்கண்ட் சட்டபேரவை தேர்தலை எதிர்பார்த்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு  தூக்கு தண்டனை

இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்தியதாக கடந்த 2011-ல் வழக்கு தொடங்கப்பட்டது , அந்த வழக்கில் 8 பேர் கைதாகினர், அதில் 5பேர் தமிழக மீனவர்கள் , 3 பேர் இலங்கை மீனவர்கள் . இவர்களுக்கு கொழும்பு நகர நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது .
      தூக்கு தண்டனை விதிக்க பட்டவர்கள் 5 பேர் தமிழக மீனவர்கள்.  ராமநாதபுரம் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் .  இந்த  தூக்கு தண்டனை வழங்கியதை கேட்டது ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
      

Wednesday 29 October 2014

கத்தி பட குழுவினர்களுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்

கத்தி பட குழுவினர்களுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்

சமீபத்தில் வெளியான கத்தி படம் விஜய்-யை  அல்லோல பட வைக்கிறது , கத்தி படத்தில் அவர் 2-ஜி ஊழலை அவர் வசனமாக பேசியிருப்பார் , ஆனால் அந்த வசனத்திற்காக ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றிருந்தது.
    ஆனால் இந்த 2-ஜி வழக்கு விசாரணையில் இருக்கையில் எப்படி இதை வசனமாக வைக்க முடியும் , என்று இந்த திரைப்பட குழுவினரிடம் மதுரை நிதிமன்றம் புகார் எழுப்பியுள்ளது . இந்த வழக்கு நிதிமன்றத்தில் இருக்கையில் இதற்கு திரைபடத்தில் திர்ப்பு வழங்குவது நிதித்துறையை அவமதிப்பதாக தெரியவருகிறது . அதனால் திரைப்பட குழுவினர்களுக்கு மதுரை நீதிமன்றம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
பாஜக புதிய அமைச்சரவை: கூட்டணி சேருமா சிவசேனா ?

பாஜக புதிய அமைச்சரவை: கூட்டணி சேருமா சிவசேனா ?

நாளை பாரதிய ஜனதா கட்சியின் புதிய அமைச்சரவை மகாராஷ்டிராவில் பதவி ஏற்கும். இந்நிலையில் கூட்டணியில் இடம்பெறுவது குறித்து சிவசேனா இன்று முடிவு எடுக்கும் என்று தெரியவருகிறது.  
 மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த  சட்டபேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  அமோக வெற்றி பெற்றது , இருந்தும் அதற்கான  தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை என வருதபடுகிறது .

இந்நிலையில் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற சிவசேனாவுடன் கட்சியுடன்  அக்கட்சி பேச்சுவாரத்தை நடத்தியது. இருந்தும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தேவிந்திர பட்நாவிஸ் முன்னிலையில்  6 அமைச்சர்கள் நாளை பதவி ஏற்க உள்ளதாக  தெரியவருகிறது. .  

  பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் சிவசேனாவை சேர்ந்த 2 பேர் பதவி ஏற்பதாக தெரியவருகிறது
  
இந்த நிகழ்ச்சியில் சுமார் முப்பது ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக  மும்பையில் உள்ள ஒரு பிரபலமான  மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய அரசு அமைக்க குறைந்த பட்சம் 145 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்பதால் 123 உறுப்பினர்களை கொண்ட பாஜகயுடன், 63 உறுப்பினர்களை கொண்ட சிவசேனா கூட்டணியில் சேர்வது உறுதியாகியுள்ளது.  இருப்பினும் அமைச்சரவையில் இடம் பெறுவது என்பது கூறித்து சிவசேனா இன்று முடிவு எடுக்கும் என்று தெரியவருகிறது..  
விசாகபட்டினம் முதல் சென்னைக்கு கப்பல்

விசாகபட்டினம் முதல் சென்னைக்கு கப்பல்

விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக  கப்பல் விட ஆசிய வங்கி ஆந்திர அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 

இது , சுற்றுலா, சரக்கு போக்குவரத்து இரண்டையும் மாநிலங்களுக்கு இடையில் கொண்டுசெல்லும்  வகையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு கப்பல் விட ஆசிய வங்கி ஆலோசனை கூறியுள்ளது . பாக்ஜலசந்தி வழியாக இந்த கப்பல் போக்குவரத்தில் படகு வீடுகள், தீம் பார்க் என்று சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக  இடம்பெறும் என்றும் தெரியவருகிறது.
ஆசிய வங்கி , சரக்கு போக்குவரத்தும் எளிதாக இருக்கும் எனவும்  6 வழி சாலைகள் இந்த கப்பல் போக்குவரத்துக்காக அமைக்கப்படவும் ஆலோசனை
கூறியுள்ளது . உடனடியாக இதை செயல்படுத்த ஆசிய வங்கி  ஆந்திர அரசிடம் குறிபிட்டுள்ளது .


இலங்கையில் மண் சரிந்து 15 பேர் உயிரிழந்தனர்

இலங்கையில் மண் சரிந்து 15 பேர் உயிரிழந்தனர்

இலங்கை பதுல்ல மாவட்டத்தில் மீரிய பெட்டா டீ எஸ்டேட்டில்   மண் சரிந்ததால் பதினைந்து  பேர் உயிரிழந்தனர் , 250  பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது .
முதல்வர் - ஜெயலலிதா சந்திப்பு

முதல்வர் - ஜெயலலிதா சந்திப்பு

முதல்வர் ஒ . பன்னிர்செல்வம்,  நத்தம் விஸ்வநாதன் மற்றும் மூத்த அமைச்சர்கள், அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர் 
மாறன் நேரில் ஆஜராக சம்மன்

மாறன் நேரில் ஆஜராக சம்மன்

மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் கலாநிதி மாறன் ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில், டெல்லி சிபிஐ நீதிமன்றம் வரும் மார்ச் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி அவர்கள் முன்னிலையில்   இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப கோரிக்கை விடுத்திருந்தது. இதனை நீதிமன்றம், கலாநிதிமாறன் மற்றும் தயாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்தகிருஷ்ணன், அதே நிறுவனத்தின் தலைமைச் செயலர்  ரால்ப் மார்ஷல் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.மேலும் இன்னும் நான்கு நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
  
aircel maxis scam ஏர்செல் தயாநிதிமாறன் முறைகேடு

2006 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் சொல்லியதாக  புகார் எழுந்தது.


ஏர்செல்லின் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றதற்கான  பலனாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் மூன்று ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் விளியிட்டுள்ளது .  

Tuesday 28 October 2014

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்

 நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் 12ஆம் தேதி முதல்  போராட்டம் நடுதுவதாக ஒன்பது தொழிற்சங்கங்கள்  தெரிவித்துள்ளது  , இதில் பத்து லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்வதாக தெரிகிறது .  இவர்களின் முக்கிய கோரிக்கையாக 25 சதவிகிதம் ஊதிய உயர்வு கோருகின்றனர் .

Monday 27 October 2014

யாழ்ப்பானை சிறையில் மீனவர்கள் உண்ணாவிரதம்

யாழ்ப்பானை சிறையில் மீனவர்கள் உண்ணாவிரதம்

ராமநாதபுரம் , புதுகோட்டை நாகை மாவட்டத்தை சேர்த்த 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர் . யாழ்ப்பானை சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு மேலும் அடுத்த மாதம் 7ஆம்  தேதி வரை காவல் நீட்டித்துள்ளது , அவர்களுக்கு சிறையில் வழங்கப்படும் உணவு பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .
          
             இதனால், தாங்கள் மேலும் நோயுற்று இருப்பதாக எங்களை சிறையிலிருந்து விடுவிக்குமாறு நேற்று இரவு முதல் உண்ணாவிரதம் இருகின்றனர் .      
கருப்பு பணம் பற்றிய தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

கருப்பு பணம் பற்றிய தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

கருப்பு பணம் பற்றிய தகவல்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளது .

       

 கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் விவரம்:
           
                   வெளிநாட்டில்  கருப்பு பணம்  வைத்திருந்தவர்களில் மூன்று பேரும் வட இந்திய வியாபாரிகள் . தபார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிரதிப் பரமன் ,  குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரத்தை சேர்ந்த பங்கஜ் லூதிய ,  கோவா மாநிலத்தை சேர்ந்த ராதா s .திம்ப்லு ஆவார்கள் .

Sunday 26 October 2014

கருப்பு பணம் பற்றிய தகவல்களை இன்று மதியரசு வெளியிடுகின்றதா ?

கருப்பு பணம் பற்றிய தகவல்களை இன்று மதியரசு வெளியிடுகின்றதா ?

கருப்பு பணம் பற்றிய தகவல்களை இன்று மதியரசு வெளியிடுகின்றதா ?
       வெளிநாட்டில் கருப்பு பணம் பதிக்கியுள்ளவ்ர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று  உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைபதகாக தகவல் வெளியாகிறது .
  அந்த மூன்று பேரும் அரசியல் பிரமுகர் இல்லை . கருப்பு பணம் பற்றிய  தகவல் வெளியிடும்போது அவர்கள் பெயர்கள் வெளியிடுவதாக கூறபடுகிறது .

        கருப்பு பணம் விவரம் பற்றிய தகவல் வெளியிட முடியாது என்ற மத்திய நிதி அமைச்சர் , இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு  ஒப்பந்தத்தின்படியே கருப்பு பணம் வைத்திருப்போரின் பெயரை வெளியிட முடியவில்லை என்று தெரிவித்தார் . மேலும், வழக்கின் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஏற்றவாறு சிறிது சிறிதாக அப்பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை உச்சநீதிமன்றத்தில் அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார் . அந்த அடிப்படையில், இன்று உச்ச நீதிமன்றத்தில்     தகவல் வெளியிடுவதாக   கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி,  கருப்புப் பணம்   விவரங்களை வெளியிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு சங்கட்டம்  ஏற்படும் என்று கூறியிருந்தார்.
    ஆனால், காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், கருப்புப் பணம் பற்றிய தகவல்களை  வெளியிட வேண்டும் என்றும், காங்கிரஸ் தெரிவித்துள்ளது .   

Saturday 25 October 2014

ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த படுகிறது

ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த படுகிறது

             புதிய முதல்வர் ஆட்சிக்கு வந்த பின்பு  நிர்வாகம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு  மக்களிடையே பெருமளவில் காணப்பட்டது . அதன் புதிய விளைவாக ஆவின் பால் விலையை உயர்த்தி முதலைமைச்சர் பன்னிர்செல்வம் உத்தரவிட்டுள்ளார் . 

           லிட்டர் பால் விலை 24 ல் இருந்து 34 ஆக உயர்கிறது . பால் விலை உயர்வதால் டீ ,காபி விலை அதிகமாகும் . குடும்ப பெண்களும் , ஏழை மக்களும் நேரடியாக பதிக்க படுகின்றனர் . இன்னும் பெரும்பாலானவர்கள், கிராமங்களில் இருந்து பக்கத்தில் உள்ள நகரத்திற்கு சென்றால் டீ யும் காப்பியும் நம்பியே செல்கின்றனர் .
   
  
              இது குறித்து அரசு விளக்குவது : பால் விலை உயர்வால் 22.2 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனைடைவர்கள் எனவும் தனியார் பால் விலையை விட இந்த விலை குறைவுதான் என ஒப்பிட்டுள்ளார் .விற்பனை விலையை பொறுத்தவரை தனியார் பால்  விலை மற்றும் இதர மாநில கூட்டுறவு பால் விலையோடு ஒப்பிடும்போது  ஆவின் பால் விலை மிகவும் குறைவாகும் .

            இதனை கருத்தில் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களின் பொருளாதார் நிலை மற்றும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் பண பரிமாற்றம் எந்த வகையிலும் பதிக்க கூடாது என்பதை நோக்கி அதே சமயம் நுகர்வோருக்கு நல்ல தரமுள்ள பால் விற்பனை செய்வதையும் உறுதி படுத்தும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்த படாமல் இருந்த ஆவின் பால்  விற்பனை விலை உயர்த்த பட வேண்டியம் அவசியம் ஏற்பட்டுள்ளது . 1 லிட்டர் பதபடுதப்பட்ட பால் ரூ.24 லில் இருந்து ரூ.34 ஆக உயர்கிறது .லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த படுகிறது . இந்த விலை உயர்வு வரும் நவ 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது .
என்.எல்.சி  போராட்டம் முடிவுக்கு வந்தது

என்.எல்.சி போராட்டம் முடிவுக்கு வந்தது

             என்.எல்.சி  ஒப்பந்த தொழிலாளர்கள் செப் 3 முதல் பணிநிரந்தரம் , ஊதிய உயர்வு போன்ற 6 அம்சங்களை கொண்ட போராட்டம் நடைபெற்றது , தற்போது அவை நிறைவேற்றப்பட்டு அணைத்து தொழிலாளர்களும் பணிக்கு புறப்பட்டனர் .

         தொழிலாளர் நல துறை முதன்மை ஆணையர் கந்தசாமி முன்னிலையில், மனிதவள முதன்மை மேலாளர் முத்து , பொது மேலாளர் பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது .
  53 நாளாக நடைபெற்ற இந்த போராட்டம், இன்று முடிவுக்கு வந்தது.


 பொது மேலாளர் பாலாஜி கூறுவது : ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு  480 ரூபாய் , பாதி தொழில்நுட்ப திறனுடைய தொழிலாளர்களுக்கு 500 ரூபாய் ,தொழில்நுட்ப திறனுடைய தொழிலாளர்களுக்கு 515 ரூபாய் ,உயர் தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு 525 ரூபாய் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது . இவை இந்த வருடம்  நவம்பர் 50 % மற்றும் 2015 நவம்பர் 50% எனவும் வழங்கப்படும் .    

Tuesday 21 October 2014

விஜய் படம் வெளியாக இருந்த திரையரங்குகளில் தாக்குதல்

விஜய் படம் வெளியாக இருந்த திரையரங்குகளில் தாக்குதல்

சென்னையில் நடிகர் விஜய் படங்கள் வெளியாக இருந்த திரையரங்குகளில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர் .  அவர்  நடித்த கத்தி படம் வரும் திபாவளிக்கு வெளியாக இருந்தது .இதற்கான முன் பதிவு நேற்றிரவு 11 மணி அளவில் சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இது  சமயம் இந்த கோர விளையாட்டால்  ரசிகர்கள் மனதில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மழை, விவசாயிகள் அச்சம்

தமிழகத்தில் மழை, விவசாயிகள் அச்சம்

தமிழகத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது , சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணபடுகிறது.  புதுகோட்டை , சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யாத ? என எதிர்பார்த்திருந்த விவசாயிகளின் மனம் குளிரபட்டது . அதே சமயம் மழை  அதிகமாக பெய்வதால் பயிர்கள் பாதிக்கப்படுமோ என விவசாயிகள்  அச்ச படுகின்றனர் ..

           சென்னையில் பெரும் மழையால் ரோட்டோரங்களில் இருந்த கடைகள் அகற்ற பட்டனர். தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது , அதனை நகராட்சி கண்டுகொள்ளவில்லை என மக்கள் வருதபடுகின்றனர் .      

Monday 20 October 2014

மராட்டியத்தில் பாஜக தீவிரம்

மராட்டியத்தில் பாஜக தீவிரம்

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க  பாஜக தீவிரம் காட்டி வருகிறது.  ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக  காங்கிரஸ் கட்சி   அறிவித்துள்ளது.  சிவசேனை கட்சியின் ஆதரவைப் பெற ரகசியமாக பாஜக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
தமிழகத்தில் மழை

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் மழை  அதிகளவில் காணபடுகிறது . தென்மேற்கு வங்கக்கடலில் கற்றலுதம் அதிகமாவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை  பெய்யும் .  தொடர் மழை பெய்வதால் ஆங்கங்கே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க பட்டது . நாமக்கல் மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்து வருகிறது . சென்னையில் மேகமூட்டமாக  காணபடுகிறது. 
காவல் நிலையங்களில்  சிசிடிவி கேமரா

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா


காவல் நிலையங்களில்  சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.   காவல் நிலைய மரணத்தை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என கூறினார் .மனுவை நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சசிதரன் அமர்வு விசாரித்தனர்.  விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 29ம்தேதி கலந்தாய்வு

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 29ம்தேதி கலந்தாய்வு

 குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  கலந்தாய்வு வரும் 29ம்தேதி தொடங்குகிறது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை3,  2013-14ம் ஆண்டு பதவிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம்தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு வரும் 29ம்தேதி முதல் நவம்பர் 1ம்தேதி வரை நடைபெறுகிறது.  காலை  8.30மணியிலிருந்து கலந்தாய்வும் நடைபெறும், 10மணி முதல் சான்றிதழ் சரிபார்ப்பும், இவை பிரேசர் பாலச் சாலை, வ.உ.சி நகர் (பிராட்வே பேருந்து நிலையம் அருகில்) சென்னை3 என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 




வருத்தமும் இல்லை  சந்தோஷமும் இல்லை

வருத்தமும் இல்லை சந்தோஷமும் இல்லை

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா  தண்டனை பெற்றவுடன் நாங்கள் சந்தோசம் படவில்லை , அவருக்கு நிபந்தனையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியஉடன்  நாங்கள் வருத்தப்படவும் வில்லை. நாங்கள் தான் இந்த வழக்கை தூண்டி விட்டதாக வதந்தி கிளம்பியது,   என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார் .
ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கம் அவதி

ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கம் அவதி

ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கம் அவதி


        அதிகளவில், ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கள் புகார் . சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாமல் ஆட்டோ ஒட்டுவதால் பயணியிடம் அதிகமாக கட்டணம் வசூலிகின்றனர். அதை மக்கள் கேட்கும் போது  இது மலை காலம் , தீபாவளி நேரம் மிட்டர்  ஓடவில்லை என சறுக்கு சொல்வதாக கூறினார்கள் .
இந்தியா மருத்துவ துறையில் மிகவும் பின்தங்கி உள்ளது

இந்தியா மருத்துவ துறையில் மிகவும் பின்தங்கி உள்ளது

இந்தியா மருத்துவ துறையில் மிகவும் பின்தங்கி உள்ளது . பிரதமர் மோடி வருத்தம் .   எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில்  கலந்து கொண்ட மோடி உரையாற்றினர்  .