Friday 31 October 2014

ஏ-டி-ம் 5 முறைக்கு மேல் பணம் எடுபவர்களுக்கு கட்டணம் .

SHARE
ஏ-டி-ம் மூலம் பணம் எடுப்பவர்களுக்கு கவனம்:   உங்களது வங்கி கணக்கில்  இருந்து பணம் எடுக்க மாதம்  5 முறைக்கு மேல் ஏ.டி.எம்-யை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
  டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்  ஆகிய பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று முதல் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து மாதம் 5 முறை மட்டுமே ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுத்தல், பணம் இருப்பு விவரம் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளை இலவசமாக தெரிந்துகொள்ள முடியும். அதற்க்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ 20 கட்டணமாக வசூலிக்க படும் .

இதே போன்று மற்ற வங்கி ஏ.டி.எம்களில்  இருந்து 3 முறை கட்டணம் இல்லாமல்  பணம் எடுக்கலாம்.கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம் மூலம் 5 முறைக்கு மேலும், மற்ற வங்கி ஏ.டி.எம்  மூலம் 3 முறைக்கு மேலும் நடைபெறும் ஒவ்வொரு உபரி பரிவர்த்தனைக்கும் வங்கி இருப்பிலிருந்து ரூ.20 பிடித்தம் செய்யப்படும்.  

  ஆனால் இந்த பிடித்தம் குறிபிட்டுள்ள 6 பெருநகரங்களில் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது. மற்ற நகரங்களில்  உள்ள ஏ.டி.எம் களில் ஏற்கனவே உள்ளபடி வாடிக்கையாளர்கள் சேவையை பெறலாம். கணக்கு வைத்திருக்கும் ஏ.டி.எம்களில் இருந்து முற்றிலும் இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. .
SHARE

Author: verified_user

0 comments: