Wednesday 29 October 2014

பாஜக புதிய அமைச்சரவை: கூட்டணி சேருமா சிவசேனா ?

SHARE
நாளை பாரதிய ஜனதா கட்சியின் புதிய அமைச்சரவை மகாராஷ்டிராவில் பதவி ஏற்கும். இந்நிலையில் கூட்டணியில் இடம்பெறுவது குறித்து சிவசேனா இன்று முடிவு எடுக்கும் என்று தெரியவருகிறது.  
 மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த  சட்டபேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  அமோக வெற்றி பெற்றது , இருந்தும் அதற்கான  தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை என வருதபடுகிறது .

இந்நிலையில் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற சிவசேனாவுடன் கட்சியுடன்  அக்கட்சி பேச்சுவாரத்தை நடத்தியது. இருந்தும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தேவிந்திர பட்நாவிஸ் முன்னிலையில்  6 அமைச்சர்கள் நாளை பதவி ஏற்க உள்ளதாக  தெரியவருகிறது. .  

  பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் சிவசேனாவை சேர்ந்த 2 பேர் பதவி ஏற்பதாக தெரியவருகிறது
  
இந்த நிகழ்ச்சியில் சுமார் முப்பது ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக  மும்பையில் உள்ள ஒரு பிரபலமான  மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய அரசு அமைக்க குறைந்த பட்சம் 145 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்பதால் 123 உறுப்பினர்களை கொண்ட பாஜகயுடன், 63 உறுப்பினர்களை கொண்ட சிவசேனா கூட்டணியில் சேர்வது உறுதியாகியுள்ளது.  இருப்பினும் அமைச்சரவையில் இடம் பெறுவது என்பது கூறித்து சிவசேனா இன்று முடிவு எடுக்கும் என்று தெரியவருகிறது..  
SHARE

Author: verified_user

0 comments: