Friday 31 October 2014

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது

SHARE
பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து உள்ளது.  இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சரி கட்டி லாபத்தை ஈட்டி வருகின்றது. இதனால்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.43ம் குறைக்கப்படுள்ளது.

   இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதலே நாடு முழுவதும் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.59ல் இருந்து ரூ.67.01 ஆக விலை சரியபடுள்ளது . டீசல் லிட்டருக்கு ரூ.59.27ல் இருந்து 56.84 ஆக சரியபட்டுள்ளது . 
 

   பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த முறை வரை  6வது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இவை , காஷ்மீர், ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பினை சாதகமான பா.ஜ.க  தலைவர்கள் கருதபடுவதாக தெரியபடுகிறது.
SHARE

Author: verified_user

0 comments: