Sunday 2 November 2014

குக்கிராமத்தை தத்து எடுத்த சச்சின். சென்னை வருகிறார்

SHARE
சென்னை வருகிறார் சச்சின் டெண்டுல்கர்.ஆந்திர மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தை, முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தத்து எடுத்து, வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், சில நாட்களுக்கு முன்பு  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிரதமரின், 'துாய்மை இந்தியா' திட்ட வளர்ச்சி நோக்கத்தின் அடிப்படையில், குக்கிராமம் ஒன்றை தத்து எடுத்து, அக்கிராமத்தில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பிய சச்சின், தனது என்னத்தை மற்றும் ஆசையை  பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

   ஆந்திராவில், நெல்லுார் மாவட்டம், கூடூர் அருகேயுள்ள புட்டம்ராஜிகண்டிகை என்ற குக்கிராமத்தை தத்து எடுக்க தேர்வு செய்தார்.. ஆயிரம் மக்கள் தொகை கொண்ட  இக்கிராமத்தை, சச்சின், தன் ராஜ்யசபா உறுப்பினர் நிதியில் இருந்து கிடைக்கும் தொகையில், பல அடிப்படை வசதிகளை, இங்கு வசிப்பவர்களுக்கு செய்து தர மேற்கொண்டார்.

இம்மாதம், 15ம் தேதி, மும்பையில் இருந்து, சென்னைக்கு வரும் சச்சின்டெண்டுல்கர் , 16ம் தேதி காலை கூடூர் பகுதிக்கு சென்று, புட்டம்ராஜிகண்டிகை கிராமத்தை பார்வையிட்டு, அங்கு வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து உள்ளார் , சர்வதேச தரத்தில் இந்த கிராமத்தை வளர்ச்சி அடையச் செய்ய விரும்பி, சச்சின் உத்தரவு படி, சில தினங்களாக, இக்கிராமத்தில் சாலை, குடிநீர், மின்மாற்றி, தெருவிளக்கு, பூமிக்குள் கழிவுநீர் கால்வாய், சுகாதாரம், மழைநீர் தேக்கத்திற்கான வசதி பணிகள், அக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.இதற்கான  மேற்பார்வை நெல்லுார் மாவட்ட ஆட்சியர் கண்காணித்து வருகிறார். 
SHARE

Author: verified_user

0 comments: