Sunday 2 November 2014

பாஜக ஆட்சி அமைக்குமா ? இன்று ஆலோசனை

SHARE

கடந்த பிப்ரவரி மாதம் முதல் டில்லியில் ஜனாதிபதி ஆட்சிதான்  நடந்து வருகிறது.இந்நிலையில்  சட்டசபையை கலைக்க வேண்டும் என ஆம்ஆத்மி கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு  விசாரணைக்கு வந்த போது இங்கு தற்போது தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்துள்ளோம் என துணைநிலை ஆளுனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டியது தானே என்றும், முயற்சிக்கு சம்மதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் இன்னும் பா.ஜ.,வுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. 

 டில்லியில் ஆட்சி அமைப்பதா,தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது பா.ஜ.க .

  இந்நிலையில் பாஜக தலைவர்கள் கலந்து முடிவு எடுப்பார்கள். ஆம்ஆத்மி  இதில் ஆட்சி அமைத்தால் பெரும்பான்மை நிரூபிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. மேலும் இதற்கென முயற்சி செய்தால் எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கிட குதிரை பேரம் நடக்கிறது என்று விமர்சிக்க படுகிறது. இதற்கான கேள்விக்கு இன்று விடை தெரிந்து விடும். 
டில்லியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் பா.ஜ., அந்த முயற்சியில் தோல்வி அடைந்தால், டில்லி சட்டசபையைக் கலைப்பதோடு, டில்லியை மீண்டும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற திட்டமிட்டு வருகிறது என்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  நடக்க போவது என்னவென்று இன்று தெரியும்.. 
SHARE

Author: verified_user

0 comments: