Showing posts with label தேசியம். Show all posts
Showing posts with label தேசியம். Show all posts

Wednesday, 26 November 2014

பெட்ரோல் டீசல் விலை ரூ.2 மேலும் குறைய வாய்ப்பு

பெட்ரோல் டீசல் விலை ரூ.2 மேலும் குறைய வாய்ப்பு

பெட்ரோல்,டீசல்  விலை லிட்டருக்கு ரூ.2  குறைக்கப்படுவதாக  தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது, இதன் காரணமாக பெட்ரோல்,டீசல் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
 சர்வதேச சந்தையில் நான்கு  ஆண்டுகளின் இல்லாத அளவில்  கச்சா எண்ணெயின்  விலை அதிகமாக குறைந்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் பெட்ரோல் விலை 30-ம் தேதி முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறையும் என்று டெல்லி தகவள் வட்டாரங்கள்  கூறபடுகின்ற்றனர்.. கடந்த 31-ம் தேதி பெட்ரோல் விலை 2.41 காசுகளும், டீசல் விலை 2.25 காசுகளும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கத. இதன் விளைவாக பெட்ரோல் பங்க உரிமையாளர்கள் வருத்தமடைவதாக தெரியவருகிறது.  

Sunday, 2 November 2014

பாஜக ஆட்சி அமைக்குமா ? இன்று ஆலோசனை

பாஜக ஆட்சி அமைக்குமா ? இன்று ஆலோசனை


கடந்த பிப்ரவரி மாதம் முதல் டில்லியில் ஜனாதிபதி ஆட்சிதான்  நடந்து வருகிறது.இந்நிலையில்  சட்டசபையை கலைக்க வேண்டும் என ஆம்ஆத்மி கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு  விசாரணைக்கு வந்த போது இங்கு தற்போது தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்துள்ளோம் என துணைநிலை ஆளுனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டியது தானே என்றும், முயற்சிக்கு சம்மதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் இன்னும் பா.ஜ.,வுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. 

 டில்லியில் ஆட்சி அமைப்பதா,தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது பா.ஜ.க .

  இந்நிலையில் பாஜக தலைவர்கள் கலந்து முடிவு எடுப்பார்கள். ஆம்ஆத்மி  இதில் ஆட்சி அமைத்தால் பெரும்பான்மை நிரூபிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. மேலும் இதற்கென முயற்சி செய்தால் எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கிட குதிரை பேரம் நடக்கிறது என்று விமர்சிக்க படுகிறது. இதற்கான கேள்விக்கு இன்று விடை தெரிந்து விடும். 
டில்லியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் பா.ஜ., அந்த முயற்சியில் தோல்வி அடைந்தால், டில்லி சட்டசபையைக் கலைப்பதோடு, டில்லியை மீண்டும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற திட்டமிட்டு வருகிறது என்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  நடக்க போவது என்னவென்று இன்று தெரியும்.. 

Friday, 31 October 2014

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து உள்ளது.  இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சரி கட்டி லாபத்தை ஈட்டி வருகின்றது. இதனால்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.43ம் குறைக்கப்படுள்ளது.

   இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதலே நாடு முழுவதும் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.59ல் இருந்து ரூ.67.01 ஆக விலை சரியபடுள்ளது . டீசல் லிட்டருக்கு ரூ.59.27ல் இருந்து 56.84 ஆக சரியபட்டுள்ளது . 
 

   பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த முறை வரை  6வது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இவை , காஷ்மீர், ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பினை சாதகமான பா.ஜ.க  தலைவர்கள் கருதபடுவதாக தெரியபடுகிறது.
ஏ-டி-ம் 5 முறைக்கு மேல் பணம் எடுபவர்களுக்கு கட்டணம் .

ஏ-டி-ம் 5 முறைக்கு மேல் பணம் எடுபவர்களுக்கு கட்டணம் .

ஏ-டி-ம் மூலம் பணம் எடுப்பவர்களுக்கு கவனம்:   உங்களது வங்கி கணக்கில்  இருந்து பணம் எடுக்க மாதம்  5 முறைக்கு மேல் ஏ.டி.எம்-யை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
  டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்  ஆகிய பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று முதல் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து மாதம் 5 முறை மட்டுமே ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுத்தல், பணம் இருப்பு விவரம் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளை இலவசமாக தெரிந்துகொள்ள முடியும். அதற்க்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ 20 கட்டணமாக வசூலிக்க படும் .

இதே போன்று மற்ற வங்கி ஏ.டி.எம்களில்  இருந்து 3 முறை கட்டணம் இல்லாமல்  பணம் எடுக்கலாம்.கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம் மூலம் 5 முறைக்கு மேலும், மற்ற வங்கி ஏ.டி.எம்  மூலம் 3 முறைக்கு மேலும் நடைபெறும் ஒவ்வொரு உபரி பரிவர்த்தனைக்கும் வங்கி இருப்பிலிருந்து ரூ.20 பிடித்தம் செய்யப்படும்.  

  ஆனால் இந்த பிடித்தம் குறிபிட்டுள்ள 6 பெருநகரங்களில் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது. மற்ற நகரங்களில்  உள்ள ஏ.டி.எம் களில் ஏற்கனவே உள்ளபடி வாடிக்கையாளர்கள் சேவையை பெறலாம். கணக்கு வைத்திருக்கும் ஏ.டி.எம்களில் இருந்து முற்றிலும் இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. .
மோடி முன்னிலையில் பதவியேர்ப்பு விழா

மோடி முன்னிலையில் பதவியேர்ப்பு விழா

மராட்டிய மாநிலத்தில் 27 ஆவது முதல்வராக தேவேந்திர பட்னவிஸ்  பதவியேற்றர். இந்த பதவியேற்ப்பு விழா மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது இதில் சுமார் 40000 பேர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.  மராட்டிய மாநிலத்தில்  பாஜக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும். இவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இது மோடி முன்னிலையில் பதவியேற்ப்பு விழா நடைபெற்றது . விழாவிற்கு சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும்  எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டனர் .